உக்ரைனை தொடர்ந்து டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் பதற்றம்! உடனே வெளியேற குடிமக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை விட்டு விரைவில் வெளியேறுமாறு மால்டோவாவுக்கான இஸ்ரேலிய தூதர் குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மால்டோவாவிலிருந்து பிரிந்து சென்ற பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் நடக்கும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் டிரோன்கள் தான் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தாக்குதல் நடத்தியதாக பிராந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், உக்ரைன் மீது பழிபோட டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் ரஷ்யா போலி தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதனிடையே, டான்பாஸை வைத்து உக்ரைன் மீது படையெடுத்தது போல், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவை காரணமாக வைத்து மால்டோவா மீது படையெடுக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு எச்சரித்து வருகிறது.
உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டார்! போரிஸ் மீது முன்னாள் தளபதி பரபரப்பு குற்றச்சாட்டு
இந்நிலையில், டிரான்ஸ்னிஸ்ட்ரியாவில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால், அப்பிராந்தியத்தை விட்டு விரைவில் வெளியேறுமாறு குடிமக்களுக்கு மால்டோவாவுக்கான இஸ்ரேலிய தூதர் அறிவுறுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் வசிக்கும் இஸ்ரேலிய குடிமக்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவுவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் உடனே அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம்.
அதுமட்டுமின்றி, எதிர்வரும் நாட்களில் டிரான்ஸ்னிஸ்ட்ரியாவுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ள இஸ்ரேலிய குடிமக்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்யுமாறு மால்டோவாவுக்கான இஸ்ரேலிய தூதர் ஜோயல் லயன் தெரிவித்துள்ளார்.