உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டார்! போரிஸ் மீது முன்னாள் தளபதி பரபரப்பு குற்றச்சாட்டு
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போலந்து ராணுவத்தின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் Waldemar Skrzypczak இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உக்ரேனிய பயிற்சி திட்டம் குறித்த விவரங்களை கூறியதன் மூலம், ராணுவ ரகசியத்தை போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்திவிட்டார்.
உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது ஐரோப்பியாவிற்கு நல்லதல்ல! ரஷ்யா எச்சரிக்கை
பிரிட்டிஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உக்ரேனிய வீரர்கள் போலந்தில் பயிற்சி பெறுவதை வெளிப்படுத்தியதன் மூலம், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை போரிஸ் ஜான்சன் ஆபத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனின் கருத்துக்கள் கருத்துக்கள் மோதலில் ஈடுபட்டுள்ள துருப்புக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என Waldemar Skrzypczak தெரிவித்துள்ளார்.