உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது ஐரோப்பியாவிற்கு நல்லதல்ல! ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் எச்சரித்துள்ளார்.
முன்னதாக ரஷ்ய படையெடுப்பை எதிர்க்கும் நாடுகள், அதன் ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள், டாங்கிகள் மற்றும் விமானங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்திருந்தார்.
லிஸ் ட்ரஸின் கருத்துக்கு பதிலளித்த ரஷ்யா அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை உக்ரைனில் குவிப்பது, ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கூறினார்.
உக்ரைனுக்கு கனரக ஆயுதங்கள் வழங்க ஜேர்மன் நாடாளுமன்றம் பச்சை கொடி!
அதுமட்டுமின்றி அது ஐரோப்பிய கண்டத்தில் உறுதியற்ற தன்மையைத் தூண்டும் என அவர் எச்சரித்தார்.
மேலும், ரஷ்யாவிற்கு எதிராக மேற்கத்திய நட்பு நாடுகள் ப்ராக்ஸி போரை நடத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.