புடினின் நிழல் கப்பற்படையைத் தாக்கும் பிரித்தானிய சிறப்புப் படைகள்: இறுதி ஒப்புதல் அளித்த ஸ்டார்மர்
உக்ரைனுக்கு ஊக்கமளிக்கும் வகையில், புடினின் நிழல் கடற்படைக் கப்பல்களைத் தாக்க பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் போர்க் கருவூலம்
ஈரானின் பாதுகாப்பு நெருக்கடியால் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வால், ரஷ்யாவின் போர்க் கருவூலம் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது பிரித்தானியா அதன் நிழல் கடற்படையைக் குறிவைப்பதை மேலும் முக்கியமானதாக்குகிறது.
இந்த நிலையில், டவுனிங் ஸ்ட்ரீட்டின் மற்றொரு நிலைமாற்றத்திற்குப் பிறகு புடினின் நிழல் கடற்படைக் கப்பல்களைத் தாக்குவதற்கு பிரித்தானிய சிறப்புப் படைகள் தயாராவதாக தெரிய வந்துள்ளது.

இந்த சிறப்புப் படைகளுக்கு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), உக்ரைனுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்
அவர், "நாம் பெருகிய முறையில் நிலையற்ற மற்றும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு முனைகளில் இருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்.
அதிகரித்த எண்ணெய் விலைகள் தனது பைகளை நிரப்ப உதவும் என்று நினைப்பதால், மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் கண்டு புடின் மகிழ்ச்சியில் கைகளைத் தேய்த்துக் கொள்கிறார். அதனால்தான் நாங்கள் அவரது நிழல் கப்பற்படையை இன்னும் கடுமையாக தாக்குகிறோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |