அடுத்த தேர்தலில் போட்டி இந்த கட்சியுடன்தான்: பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் அடுத்த தேர்தல் குறித்து பேசியுள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தேர்தலில் தங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
போட்டி இந்த கட்சியுடன்தான்
2018ஆம் ஆண்டு ரீஃபார்ம் யூகே என்னும் கட்சி துவக்கப்பட்டபோது, யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், சமீபத்திய தேர்தல்களில் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது அக்கட்சி.
சில நாடுகளைப்போல பிரித்தானியாவிலும் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், தற்போதைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் அதை சரியாக கையாளவில்லை, அதாவது, ஆளும் லேபர் கட்சி புலம்பெயர்தலை மக்கள் எதிர்பார்ப்புக்கேற்ப கட்டுப்படுத்தவில்லை என்னும் ஒரு கருத்து நிலவிவருகிறது.
அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரீஃபார்ம் யூகே கட்சியினர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புலம்பெயர்தலைக் கடுமையாக கட்டுப்படுத்துவோம் என்றும், புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவோம் என்றும் கூறிவருகிறார்கள்.
Owen Humphreys/PA Wire
அவர்களுடைய பிரச்சாரத்திற்கு மக்களில் ஒரு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
ஆளும் கட்சிக்கும் அது புரிந்துள்ளது தெரிகிறது. ஏனென்றால், பிரதமர் ஸ்டார்மரே அக்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிவருகிறார்.
சமீபத்தில் தேர்தல் குறித்து ஸ்டார்மரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அடுத்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அடுத்த தேர்தலில் லேபர் கட்சிக்கும் ரீஃபார்ம் கட்சிக்கும்தான் போட்டி இருக்கும் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த தேர்தலில் தங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என தான் நம்புவதாகவும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |