பிரதமர் இல்லத்தில் குழப்பம்... திடீரென வெளியேறிய மக்கள் தொடர்பு இயக்குநர்
பிரித்தானிய பிரதமரின் முக்கிய உதவியாளர் ஒருவர் திடீரென பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேறியுள்ள விடயம் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
உதவியாளர்களை மாற்றிய பிரதமர்
பிரித்தானிய மக்கள் மற்றும் ஆளும் லேபர் கட்சியினரிடையே பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு ஆதரவு குறைந்துவரும் நிலையில், NO.10 Downing Street என அழைக்கப்படும் பிரதமர் இல்ல அலுவலர்களில் சில மாற்றங்களைச் செய்துள்ளார் பிரதமர்.
அவ்வகையில், தனது முதன்மை தனிச் செயலரான Ninjeri Pandit என்பவரை பதவிநீக்கம் செய்தார் ஸ்டார்மர். அவர் 10 மாதங்கள் மட்டுமே தனது பதவியில் நீடித்தார்.
புதிதாக, பிரதமரின் முதன்மைச் செயலர் என்னும் ஒரு பதவியை உருவாக்கி, Darren Jones என்பவரை அந்த பதவியில் அமர்த்தியுள்ளார் ஸ்டார்மர்.
Darren Jones முன்பு கருவூலத் துறையில், சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.
தற்போது அவரது இடத்தில் James Murray கருவூல முதன்மைச் செயலராக பதவியமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும், Baroness Minouche Shafik என்பவரை தனது தலைமை பொருளாதார வல்லுநராக பணியமர்த்தியுள்ளார் ஸ்டார்மர்.
இப்படி ஸ்டார்மர் பிரதமர் இல்லத்தில் மாற்றங்கள் செய்துகொண்டிருக்க, இன்று காலை, திடீரென பிரதமரின் மூத்த உதவியாளர்களில் ஒருவரும், மக்கள் தொடர்பு இயக்குநருமான James Lyons பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற, பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
James Lyons மக்கள் தொடர்பு இயக்குநராக பொறுப்பேற்று ஓராண்டு கூட முடியவில்லை.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்திலும், வேலைகள் மற்றும் சிறுதொழில்களிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்வதை விட்டுவிட்டு, பிரதமர் செய்துவரும் மாற்றங்கள், பிரதமர் இல்லத்தில் குழப்பம் நிலவுவதையே காட்டுவதாக எதிர்க்கட்சியினர் விமர்சனம் முன்வைத்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |