ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் உறவு... ஜேர்மனி செல்லும் பிரித்தானிய பிரதமர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதால், அதாவது, பிரெக்சிட்டால், மக்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார்.
ஜேர்மனி செல்லும் பிரித்தானிய பிரதமர்
Image: POOL/AFP via Getty Image
இன்று புதன்கிழமை ஜேர்மனி செல்லும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸை சந்திக்கிறார்.
முந்தையை அரசால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை சரி செய்ய முயற்சிக்கவேண்டும் என்று கூறியுள்ள ஸ்டார்மர், தான் அதற்காகத்தான் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் செல்வதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோத புலம்பெயர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச இருக்கிறார்கள்.
கடந்த வெள்ளியன்று, மேற்கு ஜேர்மனியிலுள்ள Solingen நகரில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதும், 8 பேர் காயமடைந்ததும் ஜேர்மனியில் புலம்பெயர்தல் தொடர்பில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |