கென்யாவில் மாணவியர் விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு
கென்யாவில் மாணவியர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மாணவியர் விடுதியில் தீ விபத்து
கென்யாவின், நகுரு கவுண்டியின் கில்கில் பகுதியில் உதுமிஷி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், இதன் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகள் தங்கும் விடுதியில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் மாணவிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது வேகமாக பரவிய தீயில் சிக்கி சுமார் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 79 பேர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்கப்பட்டவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் தீ விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
2001ம் ஆண்டு கென்யாவின் மச்சாகோஸ் கவுண்டியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 67 மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |