கடவுளை சந்திக்க பட்டினி மரணம்... தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்: வெளிவரும் புதிய தகவல்

Crime Kenya Death
By Arbin Jul 17, 2023 08:02 PM GMT
Report

கென்யாவில் கடவுளை நேரிடையாக சந்திக்கும் பொருட்டு பட்டினியால் உயிரை விட்டவர்கள் எண்ணிக்கை 400 கடந்துள்ளதாகவும், புதிதாக 12 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்

கென்ய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், இதுவரை 403 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஷகாஹோலா வனப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் ஊடாக சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்,

கடவுளை சந்திக்க பட்டினி மரணம்... தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்: வெளிவரும் புதிய தகவல் | Kenya Cult Members 400 Bodies Starved Death @reuters

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாதிரியார் பால் மெக்கன்சி விசாரணை வட்டத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷகாஹோலா வனப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், மேலும் பலர் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய தேவாலயத்தில் இருந்து மிக மோசமான நிலையில் பலரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிலர் உயிருடன் மிக ஆபத்தான கட்டத்தில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டினியால் மரணமடைந்த விசுவாசிகள்

கடந்த ஏப்ரல் 13ம் திகதியில் இருந்தே, ஷகாஹோலா வனப்பகுதியில் அமைந்துள்ள அந்த தேவாலயத்தில் அதிகாரிகள் சோதனை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூறு ஆய்வுகளில், பெரும்பாலானோர் பட்டினியால் மரணமடைந்துள்ளனர். சிறார்கள் பலர் கழுத்தை நெரித்தும் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடவுளை சந்திக்க பட்டினி மரணம்... தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்: வெளிவரும் புதிய தகவல் | Kenya Cult Members 400 Bodies Starved Death Credit: Wachira Mwangi

இந்த தேவாலயத்தின் போதகரான பால் மெக்கன்சி, முன்னர் டாக்ஸி சாரதியாக பணியாற்றி, பின்னர் போதகராக மாறியவர் எனவும், ஏப்ரல் மத்தியில் இருந்தே அவர் விசாரணைக் கைதியாக உள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர் மீது பயங்கரவாதம், இன அழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. 7 பிள்ளைகளுக்கு தந்தையான பால் மெக்கன்சி கடந்த 2003ல் இந்த தேவாலயத்தை நிறுவியுள்ளார்.

மீட்கப்பட்ட 65 பேர்கள்

2017ல் விவிலியம் கல்வியை ஊக்குவிப்பது இல்லை என குறிப்பிட்டு, சிறார்கள் பாடசாலைகளுக்கு செல்வதை பால் மெக்கன்சி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இரண்டு சிறார்கள் பட்டினியால் மரணமடைந்த விவகாரத்தில் மெக்கன்சி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடவுளை சந்திக்க பட்டினி மரணம்... தோண்டி எடுக்கப்பட்ட 400 சடலங்கள்: வெளிவரும் புதிய தகவல் | Kenya Cult Members 400 Bodies Starved Death @getty

கடந்த மாதம் மெக்கன்சியின் தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட 65 பேர்கள் உணவு உட்கொள்ள மறுத்ததை அடுத்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், 50 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 4,000 தேவாலயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US