கென்யாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு
கென்யாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
கென்யாவில் கனமழை
கென்யாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 66 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பெய்த கனமழையில் சிக்கி மேலும் நான்கு பேர் வரை உயிரிழந்து இருப்பது பலியானோர் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. நாட்டில் நீடித்து வரும் மோசமான வானிலை காரணமாக பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன் நாட்டின் அபாயகரமான சூழ்நிலைகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைய வாய்ப்பு இல்லை என்பதால், நிலைமை மேலும் மோசமடையும் என்று அந்நாடு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |