கென்யாவில் வெடித்த கலவரம்: துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி
கென்யாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது, 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவில் வெடித்த போராட்டம்
கென்யாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரி உயர்வுக்கு எதிரான போராட்டங்களின் போது, குறைந்தது ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் 31 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்த பின்னர் வன்முறையாக உருமாறியது.
கென்ய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய நிதி மசோதாவால் இந்தக் கலவரம் ஏற்பட்டது.
இந்த மசோதா பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய வரிகளை விதிக்கும்.
ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கென்யா நாட்டு மக்கள், இந்தச் சட்டங்கள் தங்கள் நிதி நிலையை மேலும் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
kenya protests,
kenya tax hike protests,
kenya violence,
kenya parliament protests,
kenya deaths,