கடவுவை சந்திக்கலாம் என 400 பேரை பட்டினி போட்டு கொன்ற மதபோதகர் - 200 ஆண்டுகள் சிறை
kenyan leader sentenced 200 years for kills 400: கடவுவை சந்திக்கலாம் என 400க்கும் மேற்பட்டோரை பட்டினி போட்டு கொன்ற மதபோதகருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
400 பேரை பட்டினி போட்டு கொன்ற மதபோதகர்
கிழக்கு கென்யாவின் இந்தியப் பெருங்கடல் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் பால் மெகன்சி (paul mackenzie) என்பவர் 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் என்ற தேவாலயத்தை நடத்தி வந்தார்.

ஷகாஹோலா(Shakahola Forest) காட்டில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
800 ஏக்க பரப்பளவில் உள்ள அந்த காட்டில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் 400 க்கு மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 190 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
மெலிந்துபோன உடல்கள் ஆழமற்ற குழிகளிலும் கழிப்பறைகளிலும் கண்டறியப்பட்டது.
விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் 'குட் நியூஸ் இன்டர்நேஷனல்' தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு வருபவர்கள் என தெரியவந்தது.
200 ஆண்டுகள் சிறை
பால் மெகன்சியை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், பலவீனமான மனம் கொண்டவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் பட்டினி கிடந்தால் இயேசுவை சந்திக்க முடியும் என கூறியதாக தெரிய வந்தது.

மேலும், தண்ணீர் மற்றும் உணவு எடுக்க முயன்றவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து பால் மெகன்சியின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர்.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையில், மெக்கன்சி தான் குற்றமற்றவர் என வாதிட்டாலும், அவரின் வாதத்தை நிராகரித்த நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
பட்டினியால் கொலை செய்த குற்றத்திற்கு 100 ஆண்டுகளும், நேரடிக் கொலைக்கு 100 ஆண்டுகளும் என பால் மெகன்சிக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரின் கூட்டாளிகள் 28 பேருக்கு 10 முதல் 160 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.