தந்தைக்கு வேலை போட்டுக்கொடுத்த 16 வயது சிறுவன்
கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன், தனது தந்தையை தன்னுடைய நிறுவனத்தில் பணியமர்த்தி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
ராவ்ல் ஜான் அஜூ
Arm Technologies என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கியவர் ராவ்ல் ஜான்.
16 வயதான இவர் இதுவரை 10க்கும் மேற்பட்ட AI Toolsஐ உருவாக்கியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இன்ஸ்ட்ராகிராம், யூடியூப்யில் பொதுமக்களுக்கு ஏற்றவகையில் AIஐ புரியவைக்கும் பணியை செய்கிறார்.
மேலும் இவர், கேரளா மற்றும் துபாய் அரசின் 'Project JustEase' என்ற அரசின் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
AI Clone
ராவ்ல் ஜான் தனது 6வது வயதிலேயே கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் 'Vbot' என்ற AIஐ உருவாக்கினார்.
அத்துடன் தனது சொந்த AI Cloneஐ உருவாக்கி மிரள வைத்தார். கோயம்புத்தூரில் நடந்த 'இந்தியா டுடே கான்க்ளேக் சவுத் 2025' மாநாட்டில் இளம் தொழிலதிபரான ராவ்ல் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வதும், வாழ்க்கையில் AIயின் முக்கியத்துவம் குறித்தும் பேசியது பலரையும் கவர்ந்தது.
தொலைநோக்கு பார்வை
இவை அனைத்திற்கும் மேலாக, தனது சொந்த தந்தையை வளர்ந்து வரும் தொலைநோக்கு பார்வையை ஆதரிக்க, தனது நிறுவனத்தில் ராவ்ல் பணியமர்த்தியதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
AIஐ மனிதர்களுக்கு எதிரான கருவியாக மாற்றுவதை எதிர்க்கும் ராவ்ல், அது மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்கிறார்.
தற்போது இவர் Project JustEase திட்டத்தில் மக்களுக்கும், அரசுக்கும் ஏற்ப AI botsஐ உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |