அர்ஜென்டினா கொடியை தாடியில் வரைந்து கொண்டு கேரள கால்பந்து ரசிகர்: வைரல் வீடியோ
உலக கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அந்த நாட்டு கொடியின் வண்ணத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது தாடியில் கலர் பூசி அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா
குரோஷிய அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அர்ஜென்டினா அணி கத்தார் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்து கோல்டன் பந்தை கைப்பற்றிய மெஸ்ஸி, இந்த முறையும் ஐந்து கோல்கள் அடித்து முன்னிலையில் இருக்கும் லியோனஸ் மெஸ்ஸி கோல்டன் பூட் விருதை தட்டி செல்வதுடன், அர்ஜென்டினா அணிக்கு கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kerala, India ?? pic.twitter.com/twUPsPN9b1
— Argentina Fans Kerala (@AFAKerala) December 14, 2022
இந்நிலையில் வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
தாடியில் அர்ஜென்டினா கொடி
அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டிக்காக உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் காத்து இருக்கும் நிலையில், தங்கள் சார்ந்த அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பல்வேறு முறைகளில் தங்களை தயார் படுத்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாஜி என்பவர், தனது தாடியை அர்ஜென்டினா நாட்டு கொடியின் வண்ணத்தில் கலர் செய்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி மற்றும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மீது கொண்ட அலாதி காதலால், இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர் சாஜி என்பவர், அந்த நாட்டு கொடியின் வண்ணத்தில் தனது தாடியை கலர் செய்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் சாஜி செயல் கேரள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.