நிலச்சரிவில் பாதித்த மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய அரசு.., EMI பிடித்தம் செய்த வங்கிகள்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை அனுப்பிய நிலையில் EMI தொகையை வங்கிகள் பிடித்தம் செய்துள்ளன.
EMI பிடித்தம்
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த 30 -ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 405-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
இந்நிலையில், இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார்.
இதையடுத்து, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் வழியே நிவாரண தொகை வழங்கப்பட்டது. ஆனால், இந்த நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் EMI பிடித்தம் செய்துள்ளது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்வதே சரியாக இருக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |