17 வயது கேரள மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை: பெரும் சோகத்தில் உறவினர்கள்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கேரள மாணவர் ஒருவர் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்திய மாணவர் சுட்டுக் கொலை
கேரள மாநிலம் கோட்டம் மாவட்டம் கைப்புழா பகுதியை சேர்ந்த சன்னி என்பவர் 1992ம் ஆண்டு வேலை காரணமாக தன் மனைவி ராணியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.
பின் மனைவி ராணியும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சன்னி-ராணி ஜோடிக்கு ஜாக்சன், ஜோதி மற்றும் ஜாஸ்மின் என்ற மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவர்கள் மூவரும் தங்கள் அமெரிக்கா பள்ளியில் தங்கள் கல்வியை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 17 வயதுடைய மகன் ஜாக்சன் அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் சுட்டுக் கொன்ற நபர் எதற்காக இத்தகைய வன்முறையில் இறங்கினார், மற்றும் அது யார் என்பது போன்ற தகவல்கள் தெரியவரவில்லை.
அமெரிக்காவில் இறுதி சடங்கு
இதனிடையே குற்றவாளியை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடும்பம் அமெரிக்காவில் மகன் ஜாக்சனின் இறுதி சடங்கை நடத்த இருப்பதாக கேரளாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இது போன்று கேரள மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |