தங்கம், வைரம் எதுவும் அணியவில்லை., எளிமையான தோற்றத்தில் வைரலான கேரள மணப்பெண்
இந்திய திருமணங்களில் மணப்பெண் தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகளால் அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும்.
ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஹர்ஷா பாது என்ற பெண், தனது திருமணத்தில் எந்த நகையும் அணியாமல், எளிமையான தோற்றத்துடன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஹர்ஷா, நசீம் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை Instagram-ல் பகிர்ந்த அவர், தங்கம், வைரம், வெள்ளி போன்ற நகைகள் எதையும் அணியவில்லை என்பதே அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
பொதுவாக minimal bridal look என்றாலும், சிறிய காதணி அல்லது பிந்து போன்றவை அணிவது வழக்கம். ஆனால் ஹர்ஷா, அவற்றையும் தவிர்த்து, முழுமையான எளிமையை வெளிப்படுத்தினார். அவரது மேக்கப் கூட இயல்பான, மென்மையான no-makeup தோற்றமாக இருந்தது.
இந்த எளிமையான திருமண அலங்காரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பாரம்பரியத்தை சவாலாகக் கொண்டு, எளிமையையும் அழகையும் ஒருங்கே வெளிப்படுத்திய ஹர்ஷாவின் தோற்றம், புதிய தலைமுறைக்கு ஒரு மாதிரியாக பார்க்கப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |