தங்க மணல்... வித்தியாசமான மோசடியில் ஈடுபட்ட நபர்கள்
கேரளாவில் ஒரு வீட்டில் தங்கியிருந்த சிலர், தங்களிடம் தங்கம் கலந்த மண் இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டிலுள்ள பொற்கொலர்கள் சிலரை தொடர்புகொண்டுள்ளாரக்ள்.
ஒரு வித்தியாசமான மோசடி
இந்த பொற்கொல்லர்கள் கேரளாவிலுள்ள கொச்சிக்கு செல்ல, தங்க மண் வைத்திருப்பதாகக் கூறிய நபர்கள் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளர்கள்.
தாங்கள் வைத்திருந்த மண் மூட்டையிலிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொள்ள அவர்கள் கூற, இந்த பொற்கொல்லர்கள் ஐந்து கிலோ மண்ணை ஒரு பையில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த பையை எடை போட்டபின் அதை அந்த பொற்கொல்லர்கள் சோதனையிட, உண்மையாகவே அதற்குள் தங்கத் துகள்கள் இருந்துள்ளன.
ஆகவே, தங்களுக்கு ஐந்து டன் மண் வேண்டும் என்று சொல்லி, 50 லட்சம் ரொக்கமும், 18 லட்சத்துக்கான காசோலையும் கொடுத்துள்ளார்கள் அந்த பொற்கொல்லர்கள்.
ஆனால், அந்த சிறிய பையில் அதிக அளவில் தங்கத்துகள்கள் இருந்ததால் பொற்கொல்லர்களுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, தங்க நகைகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து அந்த மண்ணை எடுத்ததாக மண் விற்றவர்கள் நபர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால், அப்படி தொழிற்சாலையில் இருந்து எடுத்தாலுமே மண்ணில் இந்த அளவுக்கு தங்கம் இருக்காது.
ஆகவேதான் அந்த பொற்கொல்லர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்கள் கொச்சி பொலிசாரிடம் சென்று விவரத்தைக் கூற, பொலிசார் ‘தங்க மண்’ விற்ற ஐந்து பேரை கைது செய்துள்ளார்கள். அந்த ஐந்து பேரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.
ஏமாற்றியது எப்படி?
உண்மை என்னவென்றால், அந்த சாக்கு மூட்டைகளில் இருந்தது வெறும் மண்தான். அதை அந்த பொற்கொல்லர்களேதான் அள்ளி இருக்கிறார்கள்.
ஆனால், அதிலிருந்து ஐந்து கிலோ மண்ணை எடைபோடும்போது, அந்த எடை போடும் இயந்திரத்திலும், அந்த இயந்திரத்தை வைத்திருந்த மேசையிலும் சிறிய துவாரம் போட்டு வைத்திருக்கிறார்கள் அந்த மோசடியாளர்கள்.
அந்த மேசைக்குக் கீழே ஒளிந்திருந்த ஒருவர், ஊசி மூலம், தங்க முலாம் பூசும் கரைசலை அந்த அந்த எடை போடும் இயந்திரத்திலுள்ள துவாரம் மூலம் அந்த பைக்குள் செலுத்தியிருக்கிறார்.
ஆக, மண்ணை சோதிக்கும்போது அதில் தங்கத் துகள்கள் கலந்திருப்பதுபோலவே இருந்திருக்கிறது.
என்றாலும், அவர்கள் பொற்கொல்லர்கள் என்பதாலோ என்னவோ, இந்த அளவுக்கு மண்ணில் தங்கத் துகள்கள் இருக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆக, மோசடியாளர்கள் ஐந்து பேரும் வகையாக பொலிசில் சிக்கிகொண்டார்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |