திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தனர்! திரைப்பட பெண் டப்பிங் கலைஞர், ஆண் நண்பர் சடலங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு
கேரளாவில் திரைப்பட பெண் டப்பிங் கலைஞரும், அவரின் ஆண் நண்பரும் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் ரூபி பாபு (35). இவர் ஏராளமான மலையாள படங்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
இவருக்கும் திருவனந்தபுரம் சுனின் என்பவருக்கும் (45) பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்யாமலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு சுனில், தனது நண்பருக்கு போன் செய்து, ரூபி பாபு தூக்கு பாட்டு தற்கொலை செய்து கொண்டார், நானும் சாவை முத்தமிடப்போகிறேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன நண்பர், பொலிசுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் பொலிசார் விரைந்து வந்து பூட்டியிருந்த கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு ரூபி பாபுவின் உடல் கீழ்த்தளத்தில் உள்ள படுக்கையறையிலும், சுனில் முதல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடந்தனர்.
ரூபி பாபுவின் கழுத்தை இறுக்கியிருந்த கயிறு அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.