கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுமி! இரவு ஷிப்டில் இருந்த ஊழியரால் நேர்ந்த கொடுமை
கேரளாவில் கொரோனா பாதித்த 14 வயது சிறுமியிடம் மருத்துவமனை ஊழியர் மிக மோசமாக நடந்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயதான சிறுமிக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்த மருத்துவமனையில் இரவு ஊழியராக சச்சின் (26) என்பவர் வேலை செய்து வந்தார். அப்போது பாலியல் ரீதியாக சிறுமியிடம் சச்சின் அத்துமீறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவில் இருந்து மீண்ட சிறுமி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவருக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போது, சிறுமி கூறுகையில் அன்றிரவு சச்சின் என்னிடம் அநாகரீகமாக பேசியதுடன், பாலியல் ரீதியான தாக்குதலை நடத்தினார் என கூறினார்.
இதோடு தனக்கு 10 வயதாக இருந்த போது உறவினர் ஒருவரும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பொலிசார் மருத்துவ ஊழியர் சச்சின் மற்றும் சிறுமியின் 28 வயதான உறவினர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.