ஒரே நாளில் ரூ.34 கோடிக்கு அதிபதியான கேரள நபர்.., லொட்டரியால் அடித்தது அதிர்ஷ்டம்
ஓமனில் லொட்டரி டிக்கெட் வாங்கிய கேரள நபருக்கு ரூ.34 கோடி பரிசு விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ரூ.34 கோடி பரிசு
இந்திய மாநிலமான கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் (45). இவர் 23 ஆண்டுகளாக ஓமனில் தண்ணீர் நிறுவனத்தில் கூலர் டெக்னிஷியனாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 30-ம் திகதி தனது 20 நண்பர்களுடன் சேர்ந்து ஓமனில் பிக் பாக்கெட் லொட்டரியை வாங்கியுள்ளார். இதில் ராஜேஷ் வாங்கிய லொட்டரிக்கு 15 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 34 கோடி) பரிசாக அடித்துள்ளது.
கடந்த 3-ம் திகதி அன்று நடந்த குலுக்கலில் 375678 என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்தது.
இதனால் குலுக்கல் நடைபெற்ற இரவே லொட்டரி ஏற்பாட்டாளர்கள் ராஜேஷை போனில் அழைத்துள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து, அவருடைய நண்பர்கள் மெயிலை செக் செய்யுமாறு அவரிடம் கூறியுள்ளனர். அப்போது தான் அவருக்கு பரிசு விழுந்த விவரம் பற்றி தெரிந்துள்ளது.
இதனை பார்த்த ராஜேஷ் மகிழ்ச்சியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார். அந்த தருணத்தில் இருந்து மீள முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
அவர் கூறுகையில், "6 ஆண்டுகளாக நண்பர்களுடன் சேர்ந்து லொட்டரி டிக்கெட் வாங்கி வருகிறேன். இந்த முறை 1,000 திர்ஹாமிற்கு லொட்டரி டிக்கெட்டை வாங்கினோம்.
இதில் புரமோஷனுகாக 4 டிக்கெட்டுகள் இலவசமாக கிடைத்தது. அதில் ஒரு டிக்கெட்டிற்கு தான் பரிசு விழுந்துள்ளது. ஒவ்வொருவரும் 50 திர்ஹாம் போட்டு டிக்கெட் வாங்கியதால் பரிசை சமமாக பிரித்துக் கொள்ள போகிறோம்
. அதன்படி பார்த்தால் ஒவ்வொருவருக்கும் தலா 7 லட்சம் திர்ஹாம் கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.5 கோடி ஆகும்" என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டில் ராஜேஷின் மனைவி இறந்த நிலையில், அவரது 2 பிள்ளைகள் சகோதரி கண்காணிப்பில் வளர்ந்து வருகின்றனர். இந்தியாவுக்கு திரும்பி சொந்தமாக தொழில் செய்ய திட்டமிட்டுள்ளதாக ராஜேஷ் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |