பூனையை காப்பாற்ற முயன்ற நபர் பரிதாபமாக உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூர் ஒல்லுக்கார பகுதியை சேர்ந்தவர் 44 வயதான சிஜோ திமோதி (Sijo Timothy).
பூனையால் உயிரிழப்பு
சிஜோ கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9;41 மணியளவில், மன்னுத்தி கலத்தோடு சந்திப்பின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, ஒரு பூனை ஒன்று சாலையின் நடுவே இருந்த தனது குட்டியை மீட்க போராடி கொண்டிருந்தது.
இதை கவனித்த சிஜோ, உடனடியாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, அந்த பூனை குட்டியை மீட்க சென்றார்.
அப்போது எதிரே விதமாக சாலையில் வேகமாக வந்த லாரி, சிஜோ மீது மோதி அவரை தூக்கி வீசியது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக சிஜோவை மீது அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |