விஷப்பாம்பை ஏவி கட்டிலில் படுத்திருந்த 25 வயதான மனைவியை கொன்ற கணவனை நினைவிருக்கா? அது தொடர்பில் தற்போது வெளியான பதைபதைக்கும் காட்சி
கேரளாவில் விஷப்பாம்பை ஏவி மனைவியை கணவன் கொலை செய்த சம்பவத்தில் கட்டிலில் பெண் பொம்மையை வைத்து நிஜ பாம்பை ஏவி கடிக்க செய்து பொலிசார் விசாரணை நடத்தப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா (25) வாய் பேச முடியாதவர். இவருக்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் ஆனது. இந்த நிலையில் விஷப்பாம்பு கடித்ததில் உத்ரா உயிரிழந்தார்.
இதன் விசாரணையில் கணவனே பாம்பை ஏவி மனைவியை கொன்றது தெரியவந்தது. சூரஜ், வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருபவராம்.. உத்ராவை கொலை செய்வதற்காகவே கூகுளில் விதவிதமான பாம்புகளை தேடி உள்ளார். பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரிடம் 10 ஆயிரம் கொடுத்து ஒரு விஷ பாம்பை வாங்கி கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு பெட்ரூமில் உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார்.. 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது. படுக்கையிலேயே துடிதுடித்து அந்த உயிர் பிரிந்துவிட்டது.
If you don't like snakes, don't watch. Kerala police tried to reconstruct Uthra’s murder using a live cobra and a dummy pic.twitter.com/NNwkSicbIi
— Dhanya Rajendran (@dhanyarajendran) August 26, 2021
இதன்பின்னர் சூரஜை பொலிசார் கைது செய்தனர். 82வது நாளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.. உத்ராவை வீட்டில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் சூரஜ்ஜின் தாய் மற்றும் சகோதரி மீதும் பொலிசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
இப்போது இந்த கொலையை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவே ஒரு வித்தியாசமான முயற்சியை செய்துள்ளனர் பொலிசார். அதன்படி கோழிக்கறி உத்ராவை போன்றே ஒரு பொம்மையை உருவாக்கி உள்ளனர்.
அதன் கையில் கோழிக்கறி துண்டை சொருகி, நிஜ பாம்பை கடிக்க விட்டு சோதனை செய்துள்ளனர்.. இதற்காகவே, கொல்லத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், ஒரு கட்டில் போடப்பட்டு, அந்த கட்டிலில் பொம்மையை படுக்க வைத்து, அந்த பொம்மை மீது பாம்பை போட்டுள்ளனர்.
ஆனால், பாம்பை போட்டதுமே, அது பொம்மையை கடிக்கவில்லை. பிறகு பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகுதான், அந்த பொம்மையை பாம்பு 2 முறை கடித்துள்ளது. முதல் முறை 2 செ.மீ அளவும், 2வது முறை 2.4 செ.மீ. அளவும் 2.4 செ.மீ. அளவும் கடித்து இருப்பதை பொலிசார் குறிப்பெடுத்து கொண்டனர். இப்படி ஒரு டெஸ்ட் எதற்காகவென்றால், சூரஜ் மீதான குற்றத்தை நிரூபிக்கத்தானாம்.
இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பொம்மையை பாம்பு கடிப்பதை பார்க்கும் போதே இப்படி பதைபதைக்கிறதே, உண்மையில் பாம்புகடி பட்டு இறந்த பெண் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பார் என பலரும் தெரிவித்துள்ளனர்.