மனைவியை கொலை செய்துவிட்டு நேரலையில் அறிவித்த கணவர்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் தன் மனைவியை கொலை செய்துவிட்டு நேரலையில் அது குறித்து அறிவித்துள்ளார் அந்தப் பெண்ணின் கணவர்.
மனைவியை கொலை செய்துவிட்டு...
கேரளாவிலுள்ள கொல்லம் என்னுமிடத்தைச் சேர்ந்த ஐசக், இன்று காலை 6.30 மணியளவில் குளிக்கச் சென்ற தன் மனைவியான ஷாலினியை (39) கத்தியால் குத்தியுள்ளார்.
ஷாலினி கழுத்து, மார்பு மற்றும் முதுகில் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடக்க, தான் தன் மனைவியை கொலை செய்தது குறித்து பேஸ்புக் நேரலையில் அறிவித்துள்ளார் ஐசக்.
பின்னர், பொலிஸ் நிலையம் சென்ற அவர் தான் தன் மனைவியை கொலை செய்துவிட்டதாகக் கூற, வீட்டுக்கு விரைந்த பொலிசார் ஷாலினி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
தன் மனைவியை கொலை செய்ததாக ஐசக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு இருந்துவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஷாலினி கொலை குறித்து ஐசக் வெளியிட்ட வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், பின்னர் அது இணையத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |