மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கி கொண்ட நபர்: 2 நாட்களுக்கு பிறகு தெரியவந்த உண்மை
கேரளாவில் மருத்துவமனைக்கு சென்ற நபர் ஒருவர் மின்தூக்கிக்குள் இரண்டு நாட்களாக சிக்கி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
லிப்ட்டுக்குள் சிக்கி கொண்ட நபர்
திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தூக்கிக்குள் சுமார் 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிக்கி இருந்த 59 வயதான ஒருவர் திங்கட்கிழமை காலை வேளையில் மீட்கப்பட்டார்.
உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ரவிந்திரன் நாயர் (59) என்பவர் சனிக்கிழமையில் OP பிரிவுக்கு செல்வதற்காக லிப்ட்டில் ஏறியுள்ளார்.
ஆனால், மின்தூக்கி எதிர்பாராதவிதமாக கீழே இறங்கி நிற்காமல் போய்விட்டது. இதனால், அவர் லிப்டுக்குள் சிக்கி கொண்டார்.
மின்தூக்கிக்குள் சிக்கி இருந்த ரவிந்திரன் நாயர் உதவிக்கு கத்தியும் யாரும் வரவில்லை.
மேலும், அவரது போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் வெளியே உதவிக்கும் அழைக்க முடியவில்லை.
திங்கட்கிழமை காலையில் மீட்பு
திங்கட்கிழமை காலை, மருத்துவமனை பராமரிப்பு பணியாளர் வழக்கமான பரிசோதனைக்காக மின்தூக்கியை இயக்கிய போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சனிக்கிழமை காலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்த ரவிந்திரன் நாயர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |