5 ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட லொட்டரி பரிசு.., தற்போது ரூ.12 கோடிக்கு அதிபதி
கேரளா பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி பரிசுத்தொகையை கொல்லத்தைச் சேர்ந்தவர் வென்றுள்ளார்.
ரூ.12 கோடி பரிசு
கேரள மாநிலத்தில் பூஜா பம்பர் லொட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் டிசம்பர் 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இந்த லொட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி JC 325526 என்ற எண்ணிற்கு கிடைத்தது.
இந்த லொட்டரி டிக்கெட்டானது காயம்குளம் ஏஜென்சியில் இருந்து சப் ஏஜென்ட் மூலம் கொல்லம் ஏஜென்சி மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வந்தது.
இந்நிலையில், முதல் பரிசுக்கான லொட்டரி டிக்கெட்டை கொல்லத்தை அடுத்த கருநாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வாங்கியது தெரியவந்தது.
இவர், இந்த டிக்கெட்டை கொல்லத்தில் உள்ள ஜெயக்குமார் லொட்டரி ஏஜென்சியில் இருந்து வாங்கி உள்ளார். இதனால், ஜெயக்குமார் லொட்டரி ஏஜென்சி ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து ஏஜென்சி ஊழியர்கள் கூறுகையில், "தினேஷ் குமார் பல ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்டுக்களை வாங்கி வருகிறார்.
அவர், 2019-ம் ஆண்டு வாங்கிய லொட்டரி டிக்கெட்டில் 2 அல்லது 3 எண்களில் ரூ.12 கோடி ஜாக்பாட் பரிசை தவறவிட்டுள்ளார்.
தற்போது, நவம்பர் 22 -ம் திகதி பூஜா பம்பர் லாட்டரிக்கான 10 டிக்கெட்டுகளை வாங்கியதில், ஒரு டிக்கெட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது" என்றனர்.
தினேஷ் குமார் இதுபற்றி கூறுகையில், " நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது லொட்டரியில் முதல் பரிசு விழுந்தது தெரியவந்தது. இந்த பணத்தை வைத்து ஏழைகளுக்கு உதவி செய்வேன். நான் தோட்டம் மற்றும் சிறிய தொழில்களை கவனித்து வருகிறேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |