கேரளாவிடம் பணம் வாங்கி ஏமாற்றிய மெஸ்ஸியின் அர்ஜென்டினா - அமைச்சர் குற்றச்சாட்டு
அர்ஜென்டினா அணி பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக கேரள அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவை ஏமாற்றிய அர்ஜென்டினா
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவிற்கு வந்து கால்பந்து போட்டியில் விளையாட உள்ளதாக திட்டமிடப்பட்டது.

அதன் பின்னர் அந்த போட்டி மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இப்போதும் அர்ஜென்டினா அணியின் கேரள வருகை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அர்ஜென்டினா அணி எங்களிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக கேரள விளையாட்டு துறை அமைச்சர் அப்து ரகுமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்த அவர் அளித்துள்ள பேட்டியில், "மெஸ்ஸி கலந்து கொள்ளும் இந்த போட்டி நமது கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.

இதற்காக கடினமான சூழ்நிலையில், விளம்பரதாரர்களிடம் நிதி திரட்டி ரூ.250 கோடி வழங்கினோம். ஆனால், பணத்தைப் பெற்ற பிறகு, அர்ஜென்டினா கால்பந்து அணி எங்களை ஏமாற்றிவிட்டது. வருவதாக வாக்குறுதி அளித்த பின்னர், அவர்களிடமிருந்து இப்படி ஒரு துரோகத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதே போல் அவர்கள் வேறு சில நாடுகளிடமும் பணத்தை பெற்றுக்கொண்டு வராமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனால் நாங்கள் இழப்பீடு கோரி சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |