பிரித்தானியாவில் நோயாளியால் தாக்கப்பட்ட கேரள செவிலியர் இவர்தான்: புகைப்படங்கள் வெளியாகின
பிரித்தானியாவில், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்ததால் பொறுமையிழந்த நோயாளி ஒருவர், செவிலியர் ஒருவரை கத்திரிக்கோல் ஒன்றால் சரமாரியாகக் குத்தினார்.
படுகாயமடைந்த அந்த செவிலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரைத் தாக்கிய நோயாளி மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குத்தப்பட்ட கேரள செவிலியர் இவர்தான்
இந்நிலையில், அந்த நோயாளியால் தாக்கப்பட்ட செவிலியர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவைச் சேர்ந்தவரான அந்த செவிலியரின் பெயர், அச்சம்மா செரியன் (57).
2007ஆம் ஆண்டு முதல், அச்சம்மா, தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிரேட்டர் மான்செஸ்டரில் வாழ்ந்துவருகிறார், Royal Oldham மருத்துவமனையில் அவர் செவிலியராகப் பணியாற்றிவருகிறார்.
அச்சம்மாவைக் கத்திரிக்கோலால் குத்தியவர், Royton என்னுமிடத்தைச் சேர்ந்த Rumon Haque (37) என்பவர் ஆவார்.
அவர் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 18ஆம் திகதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |