கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று: பலி எண்ணிக்கை ஆறு ஆனது
கேரளாவில் பாக்டீரியா தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், அதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் ஆறு ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் பரவிவரும் பாக்டீரியா தொற்று
கேரளாவில், ஷிகெல்லாசிஸ் என்னும் பாக்டீரியா தொற்று பரவிவருகிறது. ஷிகெல்லா என்னும் பாக்டீரியாவால் பரவும் இந்த தொற்றை சீதபேதி என்றும் அழைப்பதுண்டு.
இந்த தொற்று ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் நோய் முற்றும் நிலையில், மலத்தில் இரத்தமும் சளியும் கலந்து வெளியேறும்.

ஆக, கிராமங்களில் ஒரு வீட்டில் இந்த தொற்று பரவினால், தண்ணீர் மற்றும் உணவு மூலம் அது எளிதில் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, கிராமங்களில், கழிவறையிலிருந்து வெளியேறும் நழிவு சென்றடைய கிணறு அமைத்திருப்பார்கள்.
இந்த கழிவுக் குழியின் அருகே குடிதண்ணீர் கிணறு இருக்குமானால், அதை சரியாக குளோரின் மூலம் கிருமி நீக்கம் செய்யாவிட்டால் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகம்.
பலி எண்ணிக்கை ஆறு ஆனது
கேரளாவைப் பொருத்தவரை, இதுவரை 146 பேருக்கு இந்த ஷிகெல்லா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளாரக்ள்.
இந்நிலையில், மலப்புரம் என்னும் இடத்தைச் சேர்ந்த 75 வயது பெண்மணி ஒருவர் ஷிகெல்லா தொற்றுக்கு பலியாக, பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |