மதம் மாற மறுத்த இந்திய மாணவி - உஸ்பெகிஸ்தானில் நேர்ந்த துயரம்
உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் பசந்த்-மினி தம்பதியின் மகளான சவரியா பசந்த்(21), உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.

அதே கல்லூரியில், மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார்.
மாணவ, மாணவிகள் ஒரே விடுதியில் வேறு வேறு தளங்களில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சவரியாவை, சாதருல் அனாம் மடிக்கணினியால் அடித்ததில் உயிரிழந்து விட்டதாக சாகர்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
சாதருல் அனாமை உஸ்பெகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சவரியாவின் உறவினர்கள் உஸ்பெகிஸ்தான் சென்ற நிலையில், அவரது உடல் விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சவரியாவின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது.
மதம் மாற வற்புறுத்தல்
இது குறித்து பேசிய சவரியாவின் மாமா ஜனீஷ், "உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு விசாரணை அதிகாரி, மடிக்கணினி மூலம் தலையில் அடித்ததில் அவர் உயிரிழக்கவில்லை. சவரியாவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், இது அவர் நீண்ட நேரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகவும் என்னிடமே தெரிவித்தார்.
மேலும், சாதருள் அனாம் சவரியாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதை அங்குள்ள மாணவர்கள் பலரும் பார்த்ததாக என்னிடம் தெரிவித்தனர் என விசாரணை அதிகாரி கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹரிபாடு காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |