தித்திக்கும் சுவையில் கேரளா தெரளி அப்பம்: எப்படி செய்வது?
பொதுவாக கேரளா உணவுகள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகத்தான் இருக்கும்.
அந்தவகையில், தெரளி அப்பம் கேரளாவின் பாரம்பரிய உணவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பியுண்ணும் கேரளா தெரளி அப்பம் செய்வது சுலபமான ஒன்று.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 டம்ளர்
- வெல்லம்- ¼ kg
- தேங்காய் துருவல்- ½ மூடி
- வாழைப்பழம்- 3
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- தெரளி இலை- 10
- பனை ஓலை கீற்று- 10
செய்முறை
முதலில் அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவிடவும்.
அதன் பிறகு அரிசியை மீண்டும் 2 முறை தண்ணீரில் கழுவி ஒரு துணியில் அரிசியை போட்டு உலர விட்டு அரிசியை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பின் ஒரு வாணலில் அரிசி மாவை போட்டு பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வறுத்து தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
இதன் பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், வெல்லத்தை துருவி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதன் பின் இதில் வாழைப்பழம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சப்பாத்தி மா போல் பிணையவும்.
பின் இந்த கலவையை தெரளி இலையில் வைத்து மடித்து இதனை பனை ஓலை கீற்று கொண்டு கட்டவும்.
இறுதியாக அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தெரளி இலையில் வைத்த கலவையை வைத்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் தெரளி அப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |