ஒரு புறம் யூடியூபர்.. இன்னொரு புறம் லொறி டிரைவர்: சாதித்து வரும் கேரள பெண்
சரக்கு லொறி ஓட்டுநராகி இந்தியாவையே கலக்கி வரும் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவரை பற்றி தான் பார்க்க போகிறோம்.
தற்போதைய காலத்தில் பெண்கள் என்றாலே ஐ.டி துறையிலும், வங்கி துறையிலும் மட்டுமே சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், இங்கு கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் லொறி ஓட்டுநராக இருந்து சாதித்து வருகிறார்.
யார் இந்த பெண்?
கேரளாவைச் சேர்ந்தவர் 42 வயதான ஜலேஜா ரத்தீஷ். இவர், கோட்டயத்தை சேர்ந்த ரத்தீஷை திருமணம் செய்த போது இவருக்கு இருசக்கர வாகனம் கூட ஓட்ட தெரியாது. இவருடைய கணவர் ரத்தீஸ் லொறி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் 2003 -ம் ஆண்டு சரக்கு லொறி ஒன்றை வங்கியில் கடன் வாங்கி வாங்கியுள்ளார். அதன் மூலம் மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்கிறார்.
ஒரு நாள் எதார்த்தமாக ஜலேஜா நானும் உங்களுடன் வருகிறேன் என்று ரத்தீஷிடம் கூறியுள்ளார். அப்போது அவர், லொறி ஓட்ட தெரிந்தால் தான் வர முடியும் என்று கூறியுள்ளார். அப்படி தான் ஜலேஜா லொறி ஓட்டுநராக மாறியுள்ளார். பின்னர் தனது கணவரின் உதவியுடன் இருச்சக்கர வாகனம் முதல் லொறி வரை ஓட்டக் கற்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 2018 -ம் ஆண்டு சரக்கு லொறிகளை இயக்க கற்றுக் கொண்டு உரிமமும் பெற்றுக் கொண்டார். அப்போது இருந்து கணவன் மனைவியாக இருவருமே சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்கின்றனர்.
இவர்கள் சரக்கு எடுத்து சென்று விட்டால் திரும்பி வர 15 நாட்கள் ஆகும். அப்போது, இவர்களின் குழந்தைகளை குடும்பத்தினர் பார்த்துக் கொள்கின்றனர்.
யூடியூபர் ஜலேஜா தனது கணவருடன் சேர்ந்த அனுபங்களை புத்தேட்டு டிராவல் விளாக் (Puthettu Travel Vlog) என்ற யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்து வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தாங்கள் செல்லும் இடங்கள் அங்கே கிடைக்கும் உணவு, சந்திக்கும் மக்கள் ஆகியவற்றை எல்லாம் தொகுத்து வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இவர்களுக்கு ஒரு லொறியில் தொடங்கி 27 லொறிகள் இயங்கி வருகிறது. இதுவரை இவர்கள் நேபாளம், காஷ்மீர், போர்பந்தர், ஒரிசா, கொல்கத்தா, மேகாலயா, மும்பை ஆகிய நகரங்களுக்கு சென்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |