கோடியில் புரளும் கோயம்புத்தூர் தம்பதிகள்.. மகப்பேறு ஆடைகள் மூலம் குவியும் வருமானம்
மகப்பேறு ஆடைகள் பிசினஸ் மூலம் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியினர் கோடிக்கணக்கில் வருமானம் பெற்று வருகின்றனர்.
யார் இவர்கள்?
வர்த்தகத்தில் மிகப்பெரிய வெற்றி அடைந்த தீபிகா தியாகராஜன் மற்றும் அவரது கணவர் தியாகராஜன் ஆகியோரை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தம்பதியினர் தியாகராஜனின் வேலை காரணாமாக அவுஸ்திரேலியாவில் இருந்தனர். பின்னர் கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு திரும்பினர்.
பின்பு, தமிழக மாவட்டமான கோயம்புத்தூரில் ரூ.60,000 முதலீட்டில் டி2சி மகப்பேறு பிராண்டை 'புட்சி' என்ற பெயரில் தொடங்கினர். மகப்பேறு மற்றும் குழந்தைக்கு உணவளிக்கும் ஆடைகளில் (feeding dresses) தொடங்கிய இவர்களது வளர்ச்சியானது மூன்றே ஆண்டுகளில் பெரிய பிராண்டாக மாறியது.
அவர்களின் முக்கியமான தயாரிப்புகளில், மகப்பேறு கால ஆடைகள், பாலூடும் வசதியுள்ள குர்தாக்கள், குழந்தைக்கு தேவையான பொருட்கள், சானிட்டரி பேட்கள் ட்வின்னிங் காம்போஸ், நர்சிங் பொருட்கள், பீரியட் கேர் பொருட்கள், ப்ராக்கள், நட்பு கஃப்தான்கள் ஆகியவையாகும்.
Putchi Maternity Solutions
இவர்கள் தொடங்கிய Putchi தற்போது 30 பேர் கொண்ட குழுவாக உள்ளது. இவர்களின் Putchi Maternity Solutions நிறுவனம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.
தீபிகாவின் கர்ப்ப காலத்தில் அவர் வசதியான மகப்பேறு ஆடைகளை கண்டறிய மிகவும் கஷ்டப்பட்டார். சந்தைகளில் குழந்தைகளின் வசதிக்கு ஏற்ற ஆடைகள் மட்டுமே அறிந்த அவர், மகன் அபிமன்யு பிறந்த பின் தொழிலதிபராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
பின்னர் கணவர் தியாகராஜனும் அதற்கு ஒப்புக் கொண்டவுடன் மகப்பேறு ஆடைகளை தயாரிக்க ஆரம்பித்தார். இதற்காக தீபிகா ஆடைகளை தானே வடிவமைத்து, முதல் 10 பால் புகட்டும் ஆடைகளை தைக்க உள்ளூர் யூனிட் மூலம் பணியாற்றினார்.
தமிழ்நாட்டில் பிறந்த தீபிகாவும் அவரது கணவரும் இணைந்து மகப்பேறு ஆடைகள் மூலம் தற்போது கோடிக்கணக்கில் வருமானம் பெறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |