கார் ஷோரூமில் வெடித்த கேஸ் சிலிண்டர்: துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்
துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்
துபாயின் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த 27 வயது ஷிஜின் பால்(Shijin Paul) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.
அங்கு, மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராகவும், சமூக வலைதளம் மற்றும் வீடியோ கிராபி பொறுப்பாளராகவும் ஷிஜின் பால் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 27 வயது ஷிஜின் பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 6 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷிஜின் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயண அனுபவ தொகுப்பு
உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்
ஷிஜின் பால் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் அவரது உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டுள்ளது.
உயிரிழந்த ஷிஜின் பாலுக்கு பெற்றோரும், மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷிஜின் பால் விரைவில் தன்னுடைய விடுமுறையில் ஊருக்கு சென்று அங்குள்ள தன்னுடைய மனைவியையும், குழந்தைகயையும் துபாய்க்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்ததாக அவரது முன்னாள் வசிப்பிட தோழர் நாசிர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |