இறுதிவரை போராடிய கேப்டன்! அவுஸ்திரேலியாவை முடித்த மஹாராஜ்..அதிரிபுதிரி வெற்றி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
297 ஓட்டங்கள் இலக்கு
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கெய்ர்ன்ஸில் நடந்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 296 ஓட்டங்கள் குவித்தது. மார்க்ரம் 82 ஓட்டங்களும், பவுமா 65 ஓட்டங்களும் எடுக்க, ஹெட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 7 ஓவர்களுக்கு 60 ஓட்டங்கள் என வேகமாக இன்னிங்ஸை ஆரம்பித்தது.
ஆனால், 27 ஓட்டங்களில் டிராவில் ஹெட் ஆட்டமிழக்க, கேஷவ் மஹாராஜின் மாயாஜால சுழலில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன.
லபுஸாக்னே (1), கிரீன் (3), இங்கிலிஸ் (5), கேரி (0) மற்றும் ஹார்டி (4) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
இதனால் அவுஸ்திரேலியா 89 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தத்தளிக்க, அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) தனியாளாக வெற்றிக்கு போராடினார்.
கேஷவ் மஹாராஜ் மாயாஜால சுழல்
ட்வர்ஷுய்ஸ் 33 (52) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மார்ஷ் அரைசதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 174 ஆக உயர்ந்தபோது பர்கர் பந்துவீச்சில் மார்ஷ் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் குவித்தார்.
அதன் பின்னர் எல்லிஸ் 14 ஓட்டங்களிலும், ஜம்பா 11 ஓட்டங்களிலும் அவுட் ஆக, அவுஸ்திரேலிய அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேஷவ் மஹாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |