தமிழர் நடராஜனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா? டெல்லி அணியின் ஆலோசகர் கூறிய பதில்
நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவாரா என்ற கேள்விக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதிலளித்தார்.
தங்கராசு நடராஜன்
ஐபிஎல் 2025 தொடரில் விளையாட, தமிழக வீரர் தங்கராசு நடராஜன் (Thangarasu Natarajan) ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
ஆனால் அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இம்பேக்ட் வீரராக கூட நடராஜன் விளையாடாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணியின் ஆலோசகரான கெவின் பீட்டர்சனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
உங்களால் முடிந்தால் யோசனை கூறுங்கள்
அதற்கு பதிலளித்த கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), "நடராஜன் சிறப்பாக விளையாடக் கூடியவர்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் இம்பேக்ட் வீரரையும் சேர்த்து மொத்தமாகவே 12 பேர்தான் விளையாட முடியும்.
இப்போது இருக்கும் அணியில் அவரை எங்கே விளையாட வைக்கலாம் என உங்களால் முடிந்தால் யோசனை கூறுங்கள். அது எங்களுக்கு உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |