ரொனால்டோவின் பெயரை கெடுக்க ஊடகங்கள் முயற்சிக்கும், ஆனால்.. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
மான்செஸ்டர் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரொனால்டோவின் வெளியேற்றம்
பிரபல கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேறினார்.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மான்செஸ்டர் யுனைடெட் அணி நிர்வாகம் வெளியிட்டது. உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் வேளையில் ரொனால்டோ கிளப் அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
@Getty Images: David S. Bustamante/Soccrates
கெவின் பீட்டர்சனின் ஆதரவு
இந்த நிலையில், ரொனால்டோவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மான்செஸ்டர் யுனைடெட் அணியை முன்னேற்றும் வேளையில் ரொனால்டோவின் வாள் விழுந்து விட்டது. மான்செஸ்டரில் அவரது மதிப்பு என்ன என்பது ஒருநாள் காட்டப்படும், மேலும் அணியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்கு நன்றி கூறுவார்கள்.
ஊடகங்கள் எவ்வளவோ முயற்சித்து அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். ஆனால் அவர் செய்தது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களின் நலனுக்காகவே இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
@PTI file
ரொனால்டோ 2003ஆம் ஆண்டு முதன் முதலாக மான்செஸ்டர் அணியில் களமிறங்கினார். 2009ஆம் ஆண்டு வரை அணியில் விளையாடிய அவர், மீண்டும் 2021ஆம் ஆண்டு மான்செஸ்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.