யாருக்கு வெற்றி வாய்ப்பு? முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் ஒரு பார்வை
இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என முடிவு செய்யும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.
வாரணாசி தொகுதி
ஒட்டுமொத்தமாக 400 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம் என நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தீவிரமாக உள்ளது. பலம் வாய்ந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் களம் கண்டுள்ளது.
இந்த நிலையில் ரேபரேலி முதல் திருவனந்தபுரம் வரையில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம். வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
2014ல் வாரணாசி தொகுதியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட AAP கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து நரேந்திர மோடி வெற்றி பெற்றார். சமாஜ்வாதி கட்சியின் ஷாலினி யாதவ் 2019 தேர்தலில் நரேந்திர மோடியிடம் வெற்றியை இழந்தார்.
2014 மற்றும் 2019 தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நரேந்திர மோடிக்கு எதிராக அஜய் ராய் என்பவரையே களமிறக்கி இருந்தது. ரேபரேலி தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து பாஜக தினேஷ் பிரதாப் சிங் என்பவரை களமிறக்கியுள்ளது. அமேதி தொகுதியில் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்ற ராகுல் காந்தியை 2019ல் பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றி கண்டார்.
வயநாடு தொகுதி
ரேபரேலி தொகுதியானது பிப்ரவரி மாதம் வரையில் சோனியா காந்தியின் வசமிருந்தது. மூன்று தேர்தல்கள் தவிர 1952 முதல் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்த முறை அவரை எதிர்த்து சிபிஐ தலைவரும், பெண்கள் உரிமை ஆர்வலருமான அன்னி ராஜா போட்டியிடுகிறார்.
2019 தேர்தலில் 4.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி கண்டிருந்தார். அமேதி தொகுதியில் இந்த முறை பாஜகவின் ஸ்மிருதி இரானிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கிஷோரி லால் சர்மா என்பவரை களமிறக்கியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக 2024 தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை. திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூருக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை களமிறக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் களமிறங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |