ஏழை குழந்தைகள் கல்விக்கு.,ரூ.20,000 கோடியை வாரி வழங்கிய வள்ளல்: அவரின் சொத்து மதிப்பு
ஆதரவற்ற குழந்தைகள் கல்விக்காக ரூ.20000 கோடியை வாரி வழங்கிய ஜப்பானிய தொழிலதிபர் Takemitsu Takizaki வெற்றி பயணம் இளம் தொழில் முனைவோருக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
Takemitsu Takizaki
மாறி வரும் உலக சூழ்நிலையில் வணிகத்துறையில் மிகப்பெரிய புதுமையை ஏற்படுத்தியவர்களை கூகுளில்(google) தேடி பார்த்தால், அதில் முதன்மையாக இருப்பது Keyence நிறுவனத்தின் நிறுவனர் டேகேமிட்சு தகிசாகி (Takemitsu Takizaki).
டேகேமிட்சு தகிசாகி 1945ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி ஜப்பானில் பிறந்தவர். சாதாரணமான நிலையில் இருந்து தன் வாழ்க்கையை தொடங்கிய Takemitsu Takizaki-யின் இன்றைய நிகர சொத்துமதிப்பு சுமார் 21.5 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
வெற்றிப்பாதை
தனது வெற்றிகரமான தொழில் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அமகாசாகி தொழில்துறை உயர்நிலைப் பள்ளியில்(Amagasaki Industry High School) தகிசாகி விதையிட்டார்.
இந்த காலங்களில் தகிசாகி தனது பயணத்தை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மீது அதிக ஆர்வத்துடன் முன் நகர்த்தினார்.
இறுதியில் 1974ம் ஆண்டு தகிசாகி தொடங்கிய Keyence ஆட்டோமேஷன் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ச்சி பாதையில் முன்னேற, கடந்த 2015ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். ஆனால் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
தற்போது Keyence நிறுவனம் 16 சர்வதேச நிறுவனங்களையும், 3000 ஊழியர்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சமூக அக்கறையில் மிகுந்த கவனம் கொண்டிருக்கும் டேகேமிட்சு தகிசாகி (Takemitsu Takizaki) ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக சுமார் ரூபாய் 20,000 கோடி நிதி வழங்கி உதவியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
poor student education donations, education tamil news, Keyence founder Takemitsu Takizaki donate rs.20,000 crore to underprivileged students,