கே.ஜி.எஃப். பட நடிகர் திடீர் மரணம்., ரசிகர்கள் சோகம்
கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமான செய்தி ரசிகர்கர்களையும் திரைத்துறையினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோகன் ஜுனேஜா (54) நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. பெங்களூரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
மோகன் ஜுனேஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் நடித்துள்ளார். இருப்பினும், கே.ஜி.எஃப். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
ரொறன்றோ குப்பைத்தொட்டியில் சிறுமியின் சடலம்: கனேடிய பொலிஸை அதிரவைத்துள்ள சம்பவம்!
கே.ஜி.எஃப். படத்தில் ராக்கியின் கதையை விவரிக்கும் ஆனந்த் இளவழகனிடம் தகவல் அளிக்கும் இன்ஃபார்மராக நாகராஜு என்ற கதாப்பாத்திரத்தில் மோகன் ஜுனேஜா நடித்திருப்பார்.
கே.ஜி.எஃப். படத்தில் ‘கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்… ஒத்தையா வர்றவன் மான்ஸ்டர்' என்று அவர் பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
ಕನ್ನಡದ ಖ್ಯಾತ ಹಾಸ್ಯ ನಟರಾದ ಮೋಹನ್ ಜುನೇಜಾ ಅವರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ.
— Hombale Films (@hombalefilms) May 7, 2022
ನಮ್ಮ ಕೆಜಿಎಫ್ ಚಿತ್ರ ತಂಡದ ಜತೆಗಿನ ಅವರ ಅವಿನಾಭಾವ ಸಂಬಂಧ ಮರೆಯಲಾರೆವು.
Our heartfelt Condolences to actor Mohan Juneja's family, friends & well-wishers. He was one of the best-known faces in Kannada films & our KGF family. pic.twitter.com/xDDHanWuY0
ரஷ்யாவின் அதிநவீன டாங்கியை அழித்த உக்ரைன்! சீரமைக்க ரஷ்யாவுக்கு காத்திருக்கும் சவால்...