வெறும் கனவு... ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஈரானின் காமெனி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி நிராகரித்துள்ளார்.
திணிப்பு மற்றும் மிரட்டல்
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறியதையும் காமெனி மறுத்துள்ளார். தெஹ்ரானும் வாஷிங்டனும் ஐந்து சுற்று மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 12 நாள் வான்வழிப் போருடன் அது முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்கியிருந்தன. இந்த நிலையில் ட்ரம்பை கடுமையாக விமர்சித்த காமெனி, ட்ரம்ப் தான் ஒரு பேரம் பேசுபவர் என்று கூறுகிறார்,
ஆனால் ஒரு ஒப்பந்தம் வற்புறுத்தலுடன் சேர்ந்து அதன் விளைவு முன்னரே தீர்மானிக்கப்பட்டால், அது ஒரு பேரம் அல்ல, மாறாக ஒரு திணிப்பு மற்றும் மிரட்டல் என காமெனி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், வாஷிங்டன் தெஹ்ரானுடன் சமாதான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
ஆனால் காமெனி தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி பெருமையுடன் குறிப்பிடுகிறார், அவர்கள் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குண்டுவீசி அழித்ததாக,. அதெல்லாம் வெறும் கனவு என காமெனி குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி நோக்கம்
மேலும், ஈரான் அணுசக்தி நிலையங்களை வைத்திருக்கிறதோ இல்லையோ அமெரிக்காவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இந்த தலையீடுகள் பொருத்தமற்றவை, தவறானவை மற்றும் கட்டாயப்படுத்தும் செயல் என்றார்.
மேற்கத்திய நாடுகள் ஈரான் இரகசியமாக யுரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் அணுகுண்டை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றன, மேலும் அத்தகைய நடவடிக்கையை அது நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதன் பின்னணியில், ஈரானிடம் இருந்து இஸ்ரேலை பாதுக்கும் திட்டம் என்றே நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. ஆனால், ஆயுதமயமாக்கல் முயற்சியை மறுக்கும் ஈரான், இந்தத் திட்டம் முற்றிலும் பொதுமக்களுக்கான எரிசக்தி நோக்கங்களைக் கொண்டுள்ளது என்றும் கூறி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |