உக்ரைனில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்: பதறவைக்கும் cctv காட்சிகள்
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 26 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் முழு மூச்சியில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்து இருப்பினும், இதுவரை போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை, இதனைதொடர்ந்து இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவங்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி மாறிமாறி எச்சரித்து வருகின்றனர்.
#Kharkiv: A #Russian shell explodes next to people who are standing in line at the supermarket. pic.twitter.com/QIZkgV4ZLa
— NEXTA (@nexta_tv) March 21, 2022
இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்-வில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்த cctv வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கையை விடுத்த ரஷ்ய வீரர்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: அதிரடி வீடியோ ஆதாரம்