98 பந்துகளில் 181 ரன் இலக்கை எட்டிய கவாஜா படை! சுக்குநூறாக சிதைந்த வார்னரின் சிட்னி தண்டர்
சிட்னி தண்டர் நிர்ணயித்த 181 ஓட்டங்களை இலக்கை பிரிஸ்பேன் ஹீட் அணி 16.2 ஓவரிலேயே எட்டி மிரட்டியது.
வார்னரின் அதிரடி அரைசதம்
பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான பிக் பாஷ் லீக் போட்டி தி காபா மைதானத்தில் நடந்தது.
"That is a heck of a shot!"
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
David Warner is in some form. #BBL15 pic.twitter.com/4ZeRxxhtfe
முதலில் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, டேவிட் வார்னரின் அதிரடி அரைசதம் (82) மூலம் 180 ஓட்டங்கள் குவித்தது.
Another top innings from David Warner in #BBL15 ⚡ pic.twitter.com/StG9dZsNf3
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) மற்றும் ஜேக் வில்டர்மத் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
Oh my goodness!
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
That is such a good cricket shot. #BBL15 pic.twitter.com/ekaA8UWmxz
சம்பவம் செய்த கவாஜா
இவர்களின் பார்ட்னர்ஷிப் 23 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாச, ஜேக் வில்டர்மத் (Jack Wildermuth) 39 (15) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மெக்ஸ்வீணி 12 ஓட்டங்களில் வெளியேற, கவாஜா அதிரடி அரைசதம் அடித்தார். அவர் 48 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
Great to have you back, Uzzy 🩵
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
Super knock from the @HeatBBL skipper! #BBL15 pic.twitter.com/4Lrud47EIl
எனினும், மேட் ரென்ஷா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, பிரிஸ்பேன் அணி 16.2 ஓவர்களில் 183 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
4 home games. 4 wins!@HeatBBL get the job done, and stay alive in #BBL15 🩵 pic.twitter.com/JRE8QUO79D
— KFC Big Bash League (@BBL) January 10, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |