பள்ளி நுழைவு வாயிலில் கத்தியால் குத்தப்பட்டு சிறுவன் கொலை: இரண்டாவது நபர் கைது
பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் கைரி மெக்லீன் கத்தியால் குத்தப்பட்டு கொலை.
இரண்டாவது நபரை கைது செய்தனர் பிரித்தானிய பொலிஸார்.
பிரித்தானியாவின் நார்த் ஹடர்ஸ்ஃபீஸ்ட் டிரஸ்ட் பள்ளியின் நுழைவாயிலில் கத்தியால் குத்தப்பட்டு கைரி மெக்லீன்(15) படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஹடர்ஸ்பீல்டில் நார்த் ஹடர்ஸ்ஃபீஸ்ட் டிரஸ்ட் பள்ளியின் நுழைவு வாயிலில் கைரி மெக்லீன்(15) என்ற வாலிபர் புதன்கிழமை பிற்பகல் 2.54 மணியளவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
Sky News
அவசர அறுவை சிகிச்சைக்காக லீட்ஸ் பொது மருத்துவமனைக்கு கைரி மெக்லீன்(15) கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் வியாழன் அன்று 16 வயது சிறுவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், வழக்கில் மேலும் ஒரு 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைரி தனது பள்ளிக்கு வெளியே கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தொடர்பாக பொலிஸார் நடத்தி வரும் விசாரணையில் கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் இவர் ஆவார்.
Sky News
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவின் போர் குற்றங்கள் உண்மை: ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி!
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் விவரங்கள் தெரிய வந்தால் https://mipp.police.uk/operation/13XM020122K36-PO1 இல் உள்ள பிரத்யேக ஆன்லைன் போர்டல் வழியாக காவல்துறைக்கு அனுப்பலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.