ரஷ்யாவின் போர் குற்றங்கள் உண்மை: ஐக்கிய நாடுகள் சபை அதிருப்தி!
உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரத்தை ஐ.நா வெளியீடு.
அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
உக்ரைனில் உள்ள கியேவ், செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் போர்க்குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வு குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைனிய படைகளின் கடந்த சில வார எதிர்ப்பு தாக்குதலை தொடர்ந்து ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும் பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு இருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய நாடுகளின் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் Michelle Bachelet உக்ரைனில் ரஷ்யா சட்டவிரோதமான கொலைகள் செய்து வருவதாக குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இந்த விசாரணை அமைக்கப்பட்டது.
இதனடிப்படையில் உக்ரைனில் உள்ள கியேவ், செர்னிஹிவ், கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் போர்க்குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் குழு வெள்ளிக்கிழமை ஐ நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது.
அதில் நாங்கள் பார்வையிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கமிஷன் தற்போது 16 நகரங்கள் மற்றும் குடியிருப்புகளில் இதுபோன்ற மரணங்கள் குறித்து விசாரித்து வருகிறது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அடித்தல், மின்சார அதிர்ச்சி மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற ரஷ்யப் படைகள் செய்த பிற குற்றங்களுக்கான ஆதாரங்களையும் கண்டறிந்தாக தெரியவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியின் இறப்பில் இளவரசர் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் சார்லோட்: அரச வாரிசுகளின் உணர்வை வெளிபடுத்திய இளவரசி கேட்
உக்ரேனிய படையினரால் ரஷ்யப் படைவீரர்களை தவறாக நடத்தும் இரண்டு வழக்குகளையும் புலனாய்வாளர்கள் விசாரித்தனர் என தெரிவித்துள்ளது.