ஒத்து கொண்டது உக்ரைன்! நாட்டின் முதல் நகரம் முழுமையாக ரஷ்ய படைகளிடம் வீழ்ந்தது... முக்கிய அறிவிப்பு
உக்ரைனில் உள்ள முக்கிய நகரை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை உக்ரைனே உறுதி செய்துள்ளது.
உக்ரைனில் 7வது நாளாக கடுமையாக போர் நடந்து வரும் நிலையில் பாதிப்புகள் மோசமாக உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரனில் முக்கிய நகரை ரஷ்யா கைப்பற்றியதாக உக்ரைன் ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது. அதன்படி உக்ரைனின் தெற்கு பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா முழுமையாக தன் வசமாக்கி கைப்பற்றியுள்ளது.
Ukraine's key port city #Kherson falls to #Russia#UkraineWar #RussianUkrainianWar #RussiaUkraineWar pic.twitter.com/ZWr9KNsTNw
— ummid.com (@ummid) March 3, 2022
இந்த தகவலை அதிகாரபூர்வமாக உக்ரைன் வெளியிட்டுள்ளது.மேலும் கெர்சன் ரஷ்யப் படைகளிடம் முழுமையாக வீழ்ந்த முதல் உக்ரேனிய நகரம் ஆகும்.
இதன்மூலம் போர் தாக்குதலில் ரஷ்யாவின் கை தொடர்ந்து ஓங்கி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன், அணு ஆயுத படையை உஷார் படுத்தி அதிபர் புடின் உலக அளவில் பீதியை உண்டாக்கிய நிலையில் ரஷ்யா 2வது முறையாக அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sounds of boom in #Kherson. #BanRussiafromSwift #Belgium #Moscow #Crimea #Donetsk #Germany #HelpUkraine #Kharkiv #Kiev #kievnow #Kiyv #Україна #Belarus #Donbass #Lviv #stoprussia #ukraine #Ukrainian #UkraineWar #kiev #kyiv #Харків #Чернигов #Ірпі́нь #Кривий Ріг #Бердя́нськ pic.twitter.com/MooQEW4oQj
— famous K ?? (@carlos50439089) March 3, 2022