கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள்
பிரபல நடிகை திஷா பதானியின் சகோதரி கைவிடப்பட்ட குழந்தையை மீட்டதற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார்.
ராணுவத்தில் பணியாற்றியவர்
இந்தியில் பிரபலமான நடிகையான திஷா பதானி, தமிழிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இவரது சகோதரியான குஷ்பூ பதானி ராணுவத்தில் பணியாற்றியவர் ஆவார்.
33 வயதான இவர் தற்போது உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆலோசகராக இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மூலம் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
Disha Patani’s sister rescues an abandoned baby in Bareilly.#ITDigital #DishaPatani #KhushbooPatani #IndianArmy #Rescue pic.twitter.com/1E5MuInGl7
— IndiaToday (@IndiaToday) April 21, 2025
அந்த வீடியோவில், பரேலியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கைவிடப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்கிறார். பின்னர் அந்த குழந்தையை மீட்டு, அவள் கவனித்துக் கொல்லப்படுவாள் என உறுதி அளிக்கிறார்.
பெற்றோருக்கு அவமானம்
மேலும், "நீங்கள் பரேலியைச் சேர்ந்தவராகவும், இது உங்கள் குழந்தையாகவும் இருந்தால், பெற்றோர் அவளை இந்த இடத்தில் எப்படி விட்டுச் சென்றார்கள் என்று எங்களிடம் கூறுங்கள். அத்தகைய பெற்றோருக்கு அவமானம்!" என்று அதில் கூறுகிறார்.
பின்னர் மீட்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த வீடியோவையும் குஷ்பூ பதானி பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ மூலம் திஷா பதானியின் ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்கள் சிலரும் தங்களை பாராட்டுகளை குஷ்பூ பதானிக்கு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |