28 பந்தில் 59 ரன்! வங்காளதேச லீக்கில் ருத்ரதாண்டவமாடிய பாகிஸ்தான் வீரர்
BPL தொடரின் சிட்டாகாங் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராங்க்பூர் ரைடர்ஸ் வீரர் குஷ்தில் ஷா அதிரடி அரைசதம் விளாசினார்.
ஸ்டீவன் டைலர்
வங்காளதேச பிரீமியர் லீக் போட்டியில் ராங்க்பூர் ரைடர்ஸ் (Rangpur Riders) மற்றும் சிட்டாகாங் கிங்ஸ் (Chittagong Kings) அணிகள் மோதின.
ராங்க்பூர் அணி முதலில் துடுப்பாடியது. டவ்பியூ 5 ஓட்டங்களிலும், சைப் ஹசன் 17 ஓட்டங்களிலும் அலிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்டிய ஸ்டீவன் டைலர் 39 (32) ஓட்டங்கள் விளாசி வெளியேற, இஃப்திகார் அகமது வந்த வேகத்திலேயே நடையை கட்டினார்.
குஷ்தில் ஷா ருத்ர தாண்டவம்
அடுத்து களமிறங்கிய குஷ்தில் ஷா (Khushdil Shah) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
பாகிஸ்தானின் குஷ்தில் ஷா 28 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் குவித்தார்.
ராங்க்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. அலிஸ் அல் இஸ்லாம், முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |