தள்ளாடிய அணி..7 சிக்ஸர்களுடன் 29 பந்தில் 68 ஓட்டங்கள் விளாசிய அமீரக வீரர்
UAE beat malaysia by 6 wickets: ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.
மலேசியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயன் அஃப்ஸல் அபார பந்துவீச்சு
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கோலாலம்பூரில் நடந்தது.

முதலில் ஆடிய மலேசிய அணியில் விரன்தீப் சிங் 32 ஓட்டங்களும், சையத் அஸிஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் மலேசியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ஆயன் அஃப்ஸல் கான் 3 விக்கெட்டுகளும், குஸைமா தன்வீர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

குஸைமா தன்வீர்
பின்னர் ஆடிய அமீரக அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை அணி இழந்தது.
அப்போது அதிரடியில் மிரட்டிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாச, அமீரக அணி 16.5 ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அரைசதம் விளாசியதுடன் 2 விக்கெட்களும் வீழ்த்திய குஸைமா தன்வீர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
