ரூ.9 லட்சத்தில் விமான த்ராட்டில் போன்ற கியர் ஷிஃப்டருடன் வரும் புதிய கார்
ரூ.9 லட்சத்தில் விமான த்ராட்டில் போன்ற கியர் ஷிஃப்டருடன் புதிய கார் ஒன்று சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது.
Kia India வெளியிடவிருக்கும் அதன் புதிய SUV காரான KIA Syros-ல் விமானங்களில் இருக்கும் aircraft throttle போன்ற 2-spoke steering wheel, push-button start/stop மற்றும் dual-tone interior theme ஆகியவை கிடைக்கும்.
தென் கொரிய பிராண்டான KIA டிசம்பர் 10-அன்று இந்த காரின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
சில டீலர்ஷிப்களில் தனது ஆஃப்லைன் முன்பதிவையும் தொடங்கியுள்ளது.
KIA Syros காரில் 1.0 turbo-petrol engine மற்றும் 1.5 diesel engine ஆப்ஷன்களில் கிடைக்கும். இது Kia Sonet மற்றும் Seltos இடையே நிலைநிறுத்தப்படும்.
இந்த காரின் விலை ரூ.9 லட்சத்திலிருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எஸ்யூவி வரும் டிசம்பர் 19-ம் திகதி சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜனவரி மாதம் நடைபெறும் இந்தியா மொபிலிட்டி ஷோவில் இந்த காரின் விலை அறிவிக்கப்படலாம் என்று ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜனவரி பிற்பகுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் அதன் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |